பூந்தமல்லி அருகே ஊரடங்கை மீறி செயல்பட்ட பிக்பாஸ் அரங்கிற்கு அதிரடி சீல்!

சென்னை பூந்தமல்லி அருகே கொரோனா ஊரடங்கையும் மீறி படப்பிடிப்பு நடத்தி வந்த மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு வருவாய் துறையினர் சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

சென்னை பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் இவிபி பிலிம் சிட்டியில் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனை மலையாள நடிகர் மோகன்லால் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் இங்கு படப்பிடிப்பில் ஈடுபட்ட 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்களை தனிமைப்படுத்தபட்டார்கள்.

இதைத் தொடர்ந்து படப்பிடிப்பை ஒத்திவைக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதாக வருவாய் கோட்டாட்சியருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு சென்று நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனர் மேலும் விதிமுறைகளை மீறி தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வந்த மலையாள பிக்பாஸ் அரங்கிற்கு ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியருடன் கருத்தாய்வு நடத்தியதையடுத்து பிக்பாஸ் அரங்கில் இருந்த நடிகர்கள் நடிகைகள் மற்றும் 60 ஊழியர்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டு பிக்பாஸ் அரங்கின் மூன்று நுழைவு வாயிலுக்கும் சீல் வைத்து அடைத்தார்கள்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top