பிக்பாஸ் பிரபலம் கேப்ரில்லாவுக்கும் கொரோனா தொற்று உறுதி

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்ற கேப்ரில்லா  கொரோனா பெரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். நடன நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் கேப்ரில்லா,  இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தினார். 

அதன் பின்னர் ஒரு சில திரைப்படங்களில் நடித்த கேப்ரில்லா பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த நிலையில் கேப்ரில்லா  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தான் வந்தேன். 

ஆனால் கொரோனா பரிசோதனையில் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் தயவு செய்து அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள் என்றும் அன்பை மட்டுமே பரப்புங்கள் கொரோனாவை பரப்பாதீர்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Gaby (@gabriellacharlton_)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com