ஆர்யாவின் இருவேறு கதாபாத்திரங்கள் அதுவும் ஒரே நாளில்??

தமிழில் உள்ளம் கேட்குமே படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஆர்யா. அந்த படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் நடித்து அவ்ரேஜ் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருந்தார். பிறகு விஜய் இயக்கிய மதராசபட்டினம் ஆர்யாவிற்கு திருப்புமுறையாக அமைந்தது. அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஆர்யாவின் மார்க்கெட் உச்சம் தொட்டது. தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழியிலும் நடித்து வந்தார்.கடந்த சில வருடங்களாக ஆர்யாவின் படங்கள் சறுக்கல்களை சந்தித்த நிலையில் மீண்டும் அவரது மார்க்கெட் பழையநிலைக்கு திரும்பியுள்ளது. சமிபத்தில் வெளியான சார்பட்ட பரம்பரை படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது ஆர்யா மற்றும் விஷால் நடிப்பில் வெளியாக உள்ள எனிமி படம் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் தயாராகி வருகிறது. ஆயுத பூஜைக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்நிலையில், ஆர்யா நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகியுள்ள அரண்மனை 3 படமும் ஆயுத பூஜைக்கு வெளியிட திட்டமிட்டிருந்த படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனராம். சுந்தர்.சி தற்போது வேறு தேதி இல்லை என்பதால் எனிமி படத்தின் ரிலீஸ் அன்றே அரண்மனை 3 படமும் வெளியிட உள்ளனராம். இதனால், ஒரே நாளில் ஒன்றாக ரிலீஸ் ஆகியுள்ளது ஆர்யாவின் இரண்டு படங்கள்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course