ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் – அருண் விஜய்  

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனான நடிகர் அருண் விஜய் இவர் தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக நடித்து வருகிறார். ஆனால் பெரும்பாலான படங்கள் இவருக்கு வெற்றி பெற்று தரவில்லை.

 

சமீபகாலமாக இவர் நடித்த படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகிறது. அவை தடையன தாக்க, தடம், குற்றம் 23, மாஞ்சா வேலு போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பின் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து பெரும் புகழை அடைந்தார்.

 தற்போது வெற்றி இயக்குனருடன் கூட்டணி சேர்ந்துள்ளார். வெற்றி இயக்குனர் ஹரி அருண் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார். பொதுவாக ஹரியின் படங்கள் எல்லாமே வேகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒரே. ஆனால்,தற்போது இயக்கும் அருண் விஜயின் படம் குடும்பப்பாங்கான படம்  என்று கூறியுள்ளனர்.

இந்த படத்திற்கான ஷூட்டிங் தொடங்கியுள்ளனர், முதல் ஒரு வாரத்திற்கு பழனியில் ஷூட்டிங் நடத்தப்படும் என்றும் அடுத்து இயக்குனர் ஹரியின் பேவரைட் ஸ்பாட்டான தூத்துக்குடியில் படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course