விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படம்??

தமிழில் கடந்த வருடம் அறிமுக இயக்குனர் அஸ்வத் இயக்கத்தில் வெளியான “ஓ மை கடவுளே” படம் நல்ல வரவேற்பை பெற்றது. அசோக் செல்வன், ரித்திகா சிங் மற்றும் வாணி போஜன் நடிப்பில் வெளியானது. மேலும், இந்த படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி கடவுள் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இந்த படம் நல்ல வசூலையும் எட்டியது. இந்த படத்தில் சித் ஸ்ரீராம் பாடிய கதைப்போமா என்ற பாடல் இளம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தினை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவுசெய்துள்ளனர். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கையும் இயக்குனர் அஸ்வத் இயக்கவுள்ளார். அதையடுத்து இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடந்து வரும்நிலையில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்ததுதற்போது விஜய் சேதுபதி நடித்த கடவுள் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா படத்தில் நடித்து வருகிறார். புஷ்பா படத்திற்கு பிறகு இந்த படத்தில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com