கால் வைக்கும் இடமெல்லாம் கன்னி வெடி வைக்கிறாங்கய்யா புலம்பும் டைரக்டர் ஷங்கர்

  

தமிழில் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் போனவர் ஷங்கர், இவர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கிறது.அவரது பல படங்கள் வசூலில்  சாதனை படைத்துள்ளது. ஆனால் கடைசியாக வந்த படங்கள் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுக்கவில்லை.

 

 

சங்கர் ,கமல் கூட்டணியில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இந்தியன் 2  படப்பிடிப்பு 50 % முடிந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து ,கொரோனா சிக்கல் மற்றும் பட்ஜெட் பிரச்சனை போன்ற காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது ,மீண்டும் படப்பிடிப்பு எப்போது என்று லைக்கா நிறுவனத்திற்கு தெரியாது என்ற நிலையில் உள்ளது. 

 

இந்நிலையில் டைரக்டர் ஷங்கர் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவெடுத்து தெலுங்கில் ராம் சாரணை வைத்து படம் எடுப்பதாக அறிவித்திருந்தார் , ஆனால் லைக்கா நிறுவனம் இந்தியன்-2 படப்பிடிப்பு முடித்துக் கொடுத்துவிட்டு மற்ற படங்கள் இயக்குங்கள்  என்று ஹை கோர்ட்டில் வழக்கு போட்டுள்ளது, முதலில் கோர்ட் வழக்கு தள்ளுபடி செய்தது ஆனால் தயாரிப்பு நிறுவனம்  மேல்முறையீடு செய்துள்ளது.

 

 

இப்பொழுது சங்கர் ஹிந்தியில் ‘ அந்நியன் ‘ரீமேக் செய்யப் போவதாக அறிவித்துள்ளார் ,ஆனால் ‘அந்நியன் ‘படத்தின் அனைத்து உரிமைகளும் தமிழ் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் உள்ளது ,இவர் என்னிடம் அனுமதி கேட்காமல் படத்தை எடுக்க கூடாது என்று ஷங்கருக்கு  கிடுபிடி போட்டுள்ளார் . இதனால் ஷங்கருக்கு இந்த வருடம் சிக்கல்களாவே இருக்கிறது என்று புலம்பி வருகிறார். 

  

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top