அன்று அனுஷ்கா இன்று அமலா – தியானத்தால் பக்தியில் ஆழ்ந்துவிட்டார்

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை யோகா என்றால் ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது அனுஷ்கா தான். ஆனால், அதில் தற்போது ட்விஸ்ட் வந்துள்ளது. சமீபகாலமாக போட்டோ ஷூட் என்றால் அது ஒன்று படத்திற்காக இருக்கும் அல்லது கவர்ச்சிக்காக இருக்கும் தற்போது பக்திக்கே போட்டோ ஷூட் எடுத்த பெருமை அமலா பாலுக்கு தான் சேரும்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்த அமலா பின்னர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்திற்குள் விவாகரத்து பெற்றார். திருமணத்திற்கு பிறகு சரியான பட வாய்ப்புகள் இன்றி கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். அப்படியும் வாய்ப்புகள் இல்லாததால் தனக்கு ஆன்மிகம் தான் சரி என்று கிளம்பி விட்டார்.

சமீபகாலமாக அமலாவின் போட்டோ ஷூட் எல்லாமே வைரலாகி வருகிறது. அதில், இதற்கு முன்பு
வெளியான கவர்ச்சி புகைப்படம், வடிவேலு காஸ்டியூம் போன்ற புகைப்படங்களை தொடர்ந்து தற்போது பக்தியுடன் தியானத்தில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இந்த படங்களும் வைரலாகி வருகிறது.  

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top