காதல் திருமணத்துக்கு ஓகே சொன்ன திரிஷா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக 15 ஆண்டுகள் கடந்து சிங்கமாய் நடைபோடும் திரிஷா, தான் காதல் திருமணம் தான் செய்யப்போவதாக திட்டவட்டமாக கூறியுள்ளார்.

நடிகை திரிஷாவின் தற்போதிய வயது 37. அவருக்கு ஏற்கனவே திருமணம் நிச்சயமாகி அது முறிந்துவிட்டது என்று அனைவரும் அறிந்ததே. அதன் பின்னர் தெலுங்கு நடிகர் ராணாவும், திரிஷாவும் பட விழாக்களில் அடிக்கடி ஜோடியாக பங்கேற்றதை வைத்து இருவரையும் இணைத்து கிசுகிசுக்கள் பரவின. ஆனால் சமீபத்தில் ராணாவும் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

அதை தொடர்ந்து சிம்பு – த்ரிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக தகவல்கள் வெளிவந்தன. முதன்முதலில் 2003 இல் ‘அலை’ படத்தில் நடித்துள்ளனர், பின்னர் கௌதம் மேனனின் ‘வின்னைத்தாண்டி வருவாயா’ படத்திற்காக 2010 இல் ஜோடியாக நடித்தனர். சமீபத்தில், இருவரும் கௌதம் மேனனின் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற குறும்படத்தில் நடித்தனர். அது லாக் டவுன் சமயத்தில் யூடுப் (Youtube) தளத்தில் வெளியானது. இப்போது இருவரும் இணைந்து ‘வின்னைத்தாண்டி வருவாயா 2’ படத்தில் நடித்து வருகின்றனர்.

திருமணம் பற்றி திரிஷா சமீபத்திய பேட்டியில் கூறியதாவது: “என் திருமணம் பற்றி முன்பே முடிவு செய்ததைத்தான் இப்போதும் சொல்கிறேன். என்னை முழுமையாக புரிந்து கொள்பவரையே திருமணம் செய்து கொள்வேன். அது காதல் திருமணமாகவே இருக்கும். அப்படி ஒருவரை சந்திக்கும்போது என் திருமணம் நடக்கும். அதுவரை, ‘சிங்கிள்’ ஆக இருப்பது பற்றி கவலைப்படவில்லை. ஒருவேளை அப்படி ஒருவரை சந்திக்கவில்லை என்றால், இப்படியே இருந்து விடுவேன். அதுபற்றியும் கவலைப்பட மாட்டேன்” என்று பதில் அளித்தார்.

scroll to top