கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார் கோலமாவு கோகிலா பிரபலம்..

திரையுலகிற்கு வந்து குறுகிய காலத்திலேயே தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர், குணச்சித்திர நடிகராவும் மற்றும் ஹீரோவாகவும் வளம் வருபவர் நடிகர் யோகி பாபு. சமீபகாலமாக இவர் இல்லாத படங்களே இல்லை என்று சொல்லுமவளுக்கு பல படங்களில் நடித்து வருகிறார். காமெடி நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த யோகி பாபு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் பெரும் வரவேற்பு பெற்றார்.அதன் பிறகு வெளிவந்த கூர்கா மற்றும் மண்டேலா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். அதையடுத்து தற்போது விஜய் அஜித் படங்களில் நடித்து வருகிறார். மேலும், சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடித்து வரும் படத்தில் மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த கதாபாத்திரத்தில் தற்போது யோகி பாபு நடித்து வருகிறார். இந்நிலையில், யோகி பாபு அவரது சொந்த இடத்தில் வராஹி அம்மனுக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களில் அவரது சமூக வலைத்தளங்களில் பதுவிட்டுள்ளார். யோகி பாபு மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர் என்பது குறிபிடித்தக்கது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com