இன்று அதிகாலை நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவருக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மேலும் ரசிகர்கள் மரக்கன்றுகள் நட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அவரின் உடலுக்கு தமிழக அரசு காவல்துறை மரியாதை அளிப்பதற்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டுள்ள நிலையில், விவேக் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்த அனுமதி அளிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நடிகர் விவேக்கின் உடல் காவல்துறை மரியாதையுடம் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 78 குண்டுகள் முழங்க நடிகர் விவேக்கின் உடலுக்கு காவல்துறை மரியாதை செலுத்தப்பட உள்ளது.
நடிகர் விவேக் உடல் சென்னை விருகம்பாக்கம் மேட்டுக்குப்பம் மயானத்தில் மாலை 5 மணிக்கு தகனம் செய்யப்பட உள்ள நிலையில், தற்போது அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News