விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு : காயத்ரி ரகுராம் திடுக்கிடும் தகவல்! 

சென்னையில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியின் ஆன்லைன் வகுப்பில்  ஆசிரியர் ராஜகோபால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் கடந்த சில தினங்களாக பெரும் எதிர் வினைகளைப் பெற்று வருகிறது. இதே போல் மற்ற பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரம் குறித்து பிரபலங்கள் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாலியல் புகார்: பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் சஸ்பெண்ட் | Sexual harassment case against BSPP school teacher Department of Education who sent the notice | Puthiyathalaimurai - Tamil News ...

அந்த வகையில் நடிகர் விஷால், பிஎஸ்பிபி-ன் ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் என்னை பயமுறுத்துகிறது. அந்த பள்ளி மூடப்பட வேண்டும் என்பதை உணர வைக்கிறது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் / பெற்றோரிடம் யாரும் மன்னிப்பு கேட்கவில்லை, இதுபோன்ற குற்றங்கள் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், என நான் எனது நண்பர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வலுவான நடவடிக்கை எடுக்கக் கோருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.

Sudden consultation with fans Actor Vishal contest in the election? || ரசிகர்களுடன் திடீர் ஆலோசனை நடிகர் விஷால் தேர்தலில் போட்டி?

இந்நிலையில் இதற்கு எதிராக  காயத்ரி ரகுராம், “சினிமா துறையில் இருக்கும் நீங்கள் முதலில் அங்கு நடக்கும் துன்புறுத்தல்களை கண்டியுங்கள்.  இத்துறைக்குள் புதிதாக  நுழையும் பெண்களுக்கு என்ன நடக்கிறது என்று பாருங்கள் விஷால். 

Amit Shah Comment Actress Gayatri Raghuram Supported || "இந்தியை கட்டாயமாக்குவது தவறில்லை" - அமித்ஷாவின் கருத்திற்கு நடிகை காயத்ரி ரகுராம் ஆதரவு

பெண் முன்னணி நடிகைகள் மீதான துன்புறுத்தலைப் பாருங்கள். உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். திரைப்பட தொழில்துறை பெண்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும் போது நீங்கள் உங்கள் வீரத்தை காட்டியிருக்க வேண்டும்.

உங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையின் காரணமாக உண்மையில் பெண்கள் உங்களைப் பார்த்து ஓடுகிறார்கள்” எனத் தெரிவித்துள்ளார். முன்னணி நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் தெரிவித்திருக்கும் பாலியல் குற்றச்சாட்டு மீண்டும் சமூக வலைதளங்களில் வைரலாக  மாறியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course