வலி”மை” அஜித் – எளி”மை” விஜய்

 

இன்று காலை மனைவி ஷாலினியுடன் வாக்குப்பதிவு செய்ய நடிகர் அஜித் வந்திருந்த போது அவர் அணிந்திருந்த மாஸ்க் தற்போது பேசு பொருளாக உள்ளது. கருப்பும் சிவப்பும் கலந்த அவர் மாஸ்க் அணிந்து இருந்தார். இதனால் திமுகவுக்கு அவர் ஆதரவு அளித்ததாக கூறப்படுகிறது.

 

இதேபோல பெட்ரோல் விலை உயர்வை குறிக்கும் வகையில் வாக்கு செலுத்த நடிகர் விஜய் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் வாக்குச்சாவடிக்கு சென்றது காலை முதலே வைரலாகி வருகிறது. இவரது சைக்கிளில் கருப்பும் சிவப்பும் கலந்த நிறம் இருந்தது. இதன் காரணமாக விஜயும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது.

 

 தற்செயலாக இது ஒரு கட்சியின் கொடி நிறத்தில் இருந்ததால், உடனே அந்த குறிப்பிட்ட பிரபலம் அந்த கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக குறியீடு கண்டுபிடிப்பது நெட்டிசன்களின் அன்றாட பணிகளில் ஒன்றாகிவிட்டது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top