“இதுவரைக்கும் இப்படி நா பயந்ததே இல்லை” – சந்தானம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம், இது வரைக்கும் இதுபோல் எதற்கும் பயந்தது இல்லை என்று அதிர்ந்து போய் கூறியிருக்கிறார். சந்தானம் நடிப்பில் தற்போது வெளியாக தயார் நிலையில் இருக்கும் படம் பிஸ்கோத்.

Actor Santhanam Recent Films
இப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தியேட்டர்கள் திறந்து இருப்பதால், பொது மக்களை சந்திக்க நேரடியாக தியேட்டருக்கு சென்று உள்ளார் நடிகர் சந்தானம்.

Actor Santhanam Recent Films

அதன் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த சந்தானம், கொரோனா பாதிப்பில் சினிமா துறை 100 சதவிகிதம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பிஸ்கோத் திரைப்படத்தை ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யலாம் என்று நினைத்தோம். அப்புறம் திரையரங்குகள் திறப்பதால் அவசரசரமாக வெளியிட்டோம்.

Actor Santhanam Recent Films
மக்கள் தியேட்டருக்கு வருவார்களா இல்லையோ என்று பெரிய பயம் இருந்தது. இது வரைக்கும் இதுபோல் நான் எதற்கும் பயந்தது இல்லை. மக்கள் வந்து இருக்கிறார்கள். மக்களுக்கு பெரிய நன்றி. ரசிகர்களுக்கு நன்றி என்று பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
தான் ஹீரோவாக நடித்துள்ள பிஸ்கோத் பட தயாரிப்புக்காக பட குழு, தன்னை நம்பி பல கோடி செலவு இருப்பதால் மிகுந்த அச்சத்தில் உள்ளார் சந்தானம்.
scroll to top