தங்களது நட்பை கொண்டாடும் விதமாக நடிகர் மகத், சிம்புவுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அஜித்தின் மங்காத்தா படம் மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத், பிக்பாஸ் சீசன் 2 மூலம் உலகத் தமிழர்களிடையே மேலும் பிரபலமடைந்தார். இவை எல்லாவற்றையும் விட அவரை பிரபலமாக்கியது பிக்பாஸ் சீசனிலிருந்து மகத் வெளியே வந்ததும் சிம்பு அவரை சந்தித்து, சினிமாவுக்குச் சென்றது போன்ற புகைப்படங்கள்தான். இருவரும் பள்ளிகால நண்பர்கள் என்பது எல்லோருமே அறிந்ததே.
இந்நிலையில், மகத் தனது ட்விட்டர் பக்கத்திலும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் புகைப்படத்தையும் வீடியோவையும் பகிர்ந்திருக்கிறார். சிம்பு பேசியிருத்த அந்த வீடியோவில் அவரை கூறியது, கடினமான காலக்கட்டங்களில்தான் நம்முடன் யார் இருக்கிறார்கள் என்பது புரியும் என்றார்.