கார்த்திக் இரண்டு வேடத்தில் நடிக்கும் – சர்தார்

நடிகர் கார்த்திக் சுல்தான் படத்திற்கு அடுத்த படமாக சர்தார் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அப்டேட் வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது. இந்த படத்தில் கார்த்திக் இரட்டை வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கார்த்தி நடிப்பில் இந்த வருடம் சுல்தான் திரைப்படம் திரைக்கு வந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் விஷயத்தில் சுல்தான் கஜானாவை நிரப்பியது.


இதில் ஒரு போலீஸ், ஒரு உளவாளி கதாபாத்திரங்கள் வலுவாக இடம்பெறுவதாக பி.எஸ்.மித்ரன் கூறியுள்ளார். இந்த படத்தில்  இரு வேடங்களில் கார்த்தி நடிப்பதாக கூறப்படுகிறது. ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரு நாயகிகள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் சிம்ரன் நடிக்கிறார். இதற்கு முன் சிறுத்தை காஷ்மோரா படங்களில் கார்த்திக்  இரு வேடங்களில் நடித்துள்ளார். சர்தார் மூன்றாவது படமாகும்.


தற்போது மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். நேற்று, பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கும் சர்தார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிட்டனர். இரும்புத்திரை படத்தின் மூலம் அழுத்தமாக தடம் பதித்த பி.எஸ்.மித்ரனின் இரண்டாவது படம் ஹீரோ சுமாராகவே போனது. அதையடுத்து மூன்றாவது படமாக சர்தார் தயாராகிறது. சர்தார் படத்தை  பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஜீ.வி.பிரகாஷ் இசையில் ஏற்கனவே இரு பாடல்களின் கம்போஸிங் முடிந்துவிட்டது. சென்னையில் படத்திற்காக பிரமாண்ட அரங்கு அமைக்கிறார்கள். சென்னை தவிர்த்து மைசூர், தென்காசியில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course