கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போட்டுக் கொண்டார் நவரச நாயகன்

இதற்கு முன்  மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளார் நவரச நாயகன் கார்த்திக். இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மூச்சு திணறல் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருந்துள்ளது. முதல்கட்டமாக சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது.


தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, கார்த்திக் அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். மருத்துவமனையில் இருந்த போது அவருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டது. கார்த்திக் தற்போது பிரசாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டதை அடுத்து அந்தகன் படப்பிடிப்பு தளத்தில் உள்ள அனைவருக்கும் சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இந்நிலையில் இன்று கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்டுக்கொண்டார் கார்த்திக். இதே படத்தில் நடித்து வரும் நடிகை ஊர்வசி, முதல் டோஸை  படப்பிடிப்பு தளத்திலேயே போட்டுக் கொண்டார். பாதுகாப்பாக படப்பிடிப்பை தொடர வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என படத்தின் டைரக்டர் தியாகராஜன்  கூறி உள்ளார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course