ஒத்த செருப்பின் ரீ-மேக்கில்  ஹீரோவாக அபிஷேக் பச்சன்!!!!

 தமிழ் திரையுலகில் எழுத்தாளராகவும், தனது அழுத்தமான வசனங்களால் ரசிகர்களை கவர்ந்த நடிகர் பார்த்திபன். தானே இயக்குனராகவும், நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள திரைப்படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், ஆதரவையும்  பல்வேறு விருதுகளையும் வென்றது.

abhishiek-bachchan-in-oththa-seruppu-hindi-remake

பார்த்திபன் இந்தப் படத்தை ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யத் திட்டமிட்டு வருகிறார். இதற்காகப் பல்வேறு தரப்பினரிடம் பேசி வருகிறார் பார்த்திபன். இந்நிலையில் அந்த படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய பார்த்திபன், அபிஷேக் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதை பற்றிய அப்டேட் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சென்னை வந்த பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்திக்கிடம் ‘ஒத்த செருப்பு’ இந்தி ரீ-மேக்கில் நடிக்க பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தியது நினைவு கூரத்தக்கது. தேபோல் ஆங்கில ரீ-மேக்கில்  ‘ட்ரூ லைஸ்’ படத்தின் தயாரிப்பாளரிடம் ‘ஒத்த செருப்பு’ ரீமேக் தொடர்பாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News
                      

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top