17 வயது உப்பெண்ணா பட நடிகை – தனுஷ்க்கு ஜோடியா… 

 

கர்ணன் படத்தை தொடர்ந்து பல படங்களை நடிக்க உள்ள தனுஷ் அதனை தொடர்ந்து தற்போது த கிரே மேன், அற்றங்கிரே, முண்டாசுப்பட்டி ராம்குமார் இயக்கத்தில் உருவான ஒரு படம், செல்வராகவனுடன் நானே வருவேன் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 போன்ற படங்கள் விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் தனுஷ்க்கு ஏற்கனவே மாரி மற்றும் மாரி-2 போன்ற படங்களை கொடுத்த பாலாஜி மோகன் இயக்கத்தில் முழுக்க முழுக்க ஐபோனில் ஒரு படம் உருவாக உள்ளதாம்.

 

 

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை ஆனாலும் படத்தில் நடிப்பதற்கான நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகின்ற நிலையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற உப்பெண்ணா படத்தின் பிரபல இளம் நடிகையான கீர்த்தி ஷெட்டி என்பவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

 

 

இந்த நடிகைக்கு வெறும் 17 வயது தான்  என்பதும் குறிப்பிடத்தக்கது. உப்பெண்ணா படத்தின் வெற்றிக்கு பிறகு கீர்த்தி ஷெட்டிக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

 

அந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். தெலுங்கை தொடர்ந்து தமிழிலும் கீர்த்தி ஷெட்டி முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக பல பட வாய்ப்புகளை கைப்பற்றி கலக்கி வருகிறாராம்.    

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course