ஐபிஎல் 2021 : பெங்களூர் அணி அபார வெற்றி

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற 16 போட்டியில் பெங்களூர் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோஹ்லி பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஷிவம் துபே 32 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார், இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

 

178 ரன்களை இலக்காகக் கொண்டு களம் இறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் கோஹ்லி மற்றும் படிக்கல் இருவரும் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இதன்மூலம் பெங்களூர் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்களும், கோஹ்லி 47 பந்துகளில் 72 ரன்களும் அடித்து களத்தில் இருந்தனர்.


இந்த சீசனில் பெங்களூர் அணிக்கு கிடைத்த 4 வெற்றி இதுவாகும். இந்த அணி விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி விளையாடிய 4 போட்டிகளில் 1 வெற்றி 3 போட்டிகளில் தோல்வியடைந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்த போட்டியில் படிக்கல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course