இந்திய கிரிக்கெட் வாரியம் வருடம் வருடம் ஒப்பந்த பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதேபோல் 2020-ம் ஆண்டு அக்டோபர் முதல் 2021-ம் ஆண்டு செப்டம்பர் வரையிலான வீரர்களின் புதிய ஒப்பந்த பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியல் “A+”,”A “, “B ” ,”C ” என நான்கு வகையான வீரர்களை அடக்கியுள்ளது.
இதில் , “A+” பிரிவில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா,ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். “A+” பிரிவில் உள்ள வீரர்களுக்கு சம்பளம் ரூ.7 கோடி. அது படி இந்த மூன்று வீரர்களும் ஆண்டு வருமானமாக ரூ.7 கோடி சம்பளம் பெறுகின்றனர்.
“A “பிரிவில் உள்ள வீரர்களுக்கு ஆண்டு வருமானம் ரூ.5 கோடி,இதன் படி A பிரிவில் உள்ள வீரர்கள் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரஹானே, ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
“B” பிரிவினருக்கு ஆண்டு வருமானம் ரூ.3 கோடி, இந்த பிரிவில் புவனேஷ்வர்குமார், சஹா, உமேஷ் யாதவ், ஷர்துல் தாகூர், மயங்க் அகர்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
“C” பிரிவினருக்கு சம்பளம் ரூ.1 கோடி என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த பிரிவில் குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், சுப்மான் கில், ஹனுமா விஹாரி, அக்ஷர் பட்டேல், ஸ்ரேயாஸ் அய்யர், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
கேதர் ஜாதவ், மனிஷ் பாண்டே ஆகியோர் பட்டியலில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
தற்போது கலக்கி வரும் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு ஒப்பந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. அதேபோல் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சஹார் ஆகியோரும் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News