நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் நடத்த திட்டம்

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை செப்டம்பரில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 60 போட்டிகளில் 29 ஆட்டங்கள் நடந்து முடிந்திருக்கிறது .

இந்நிலையில் வீரர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த சீசன் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனிடையே மீதமுள்ள 31 போட்டிகளையும் டி20 உலக கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் நடத்தி முடிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top