கொல்கத்தா அணியை 38 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூர் அணி ஹாட்ரிக் வெற்றி…

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று மாலை நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்சை எதிர்கொண்டது. போட்டியில் டாஸ் வென்று பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

 

 

மேக்ஸ்வெல் நாலாபுறமும் பந்துகளை சிதறடித்து  ரன்ரேட்டை மளமளவென உயர்த்தினார். அவர் 28 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். அணியின் ஸ்கோர் 148 ஆக உயர்ந்த போது மேக்ஸ்வெல் 78 ரன்களில் கேட்ச் ஆனார்.

 

20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 4 விக்கெட்  இழப்பிற்கு  204 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 76 ரன்களுடனும், கைல் ஜாமிசன் 11 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். கடைசி 6 ஓவர்களில் மட்டும் பெங்களூரு வீரர்கள் 87 ரன்கள் திரட்டினர்.

205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. கொல்கத்தா அணி 166 ரன்கள் மட்டுமே எடுத்து 8 விக்கெட் இழப்பிற்கு எடுத்து தோல்வியுற்றது. பெங்களூர் அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றது. இந்த தொடரில் பெங்களூரு 3 வது வெற்றியை பெற்றுள்ளது..

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course