கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்த தொற்றுக்கு பணியானோர் எண்ணிக்கையும் குறையவில்லை. அந்த வகையில் ராஜஸ்தான் அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் விவேக் யாதவ் புதன் கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 36.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, யாதவ் புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருந்தார், ஆனால் சில நாட்களுக்கு முன்பு, அவர் வைரஸால் பாதிக்கப்பட்டு ஜெய்ப்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் – அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்த கொரோனாவால் பல கிரிக்கெட் வீரர்கள் பாதிக்கப்பட்டதால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விவேக் யாதவின் குடும்பத்திற்கு அனைத்து வீரர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News