பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் திடீரென மருத்துமனையில் அனுமதி!

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல் குடலில் ஏற்படும் அப்பெண்டிசைட்டிஸ் நோயால் பாதிப்படைந்த உள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான லோகேஷ் ராகுல் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவர் குடல்வால் வளர்ச்சியால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சை மூலம் குடல்வால் அகற்றப்பட உள்ளது.

எனவே அவர் இப்போதைக்கு ஐபிஎல் போட்டிகளில் ஆட முடியாது அவருக்கு பதிலாக நேற்றைய டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயக்க அகர்வால் அணியை வழிநடத்தினார். லோகேஷ் ராகுல் 7 ஆட்டங்களில் ஆடி 4 அரைசதம் உள்பட 331 ரன்கள் குவித்துள்ளார்.

அவர் இல்லாதது பஞ்சாப் அணிக்கு நிச்சயம் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதுவரை அவர் 7 போட்டிகளில் விளையாடி 331 ரன்கள் குவித்துள்ளார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டிகளில் கூட 57 பந்துகளில் 91 ரன்கள் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course