ஐபிஎல் 2021 : பஞ்சாப் அணியை பந்தாடிய ஐதராபாத் அணி – 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறும் 14 வது போட்டியில் பஞ்சாப் அணியும் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தனர். பஞ்சாப் அணியில் அகர்வால் மற்றும் ஷாருக் கான் இருவரும் தலா 22 ரன்கள் குவித்தனர்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேறினர். பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் வெறும் 4 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். இதனால் பஞ்சாப் அணி 19 .4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 120 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஐதராபாத் அணியில் கலீல் அஹமது 3 விக்கெட்டுகளையும், அபிஷேக் சர்மா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

அடுத்து 121 என்ற எளிய இலக்கை துரத்திய ஐதராபாத் அணியினரின் அதிரடியான ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் பேர்ஸ்டோ 63 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 37 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

 

இந்த வெற்றி ஐதராபாத் அணியின் முதல் வெற்றி ஆகும். ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. பஞ்சாப் அணி 1 வெற்றி மற்றும் 3 போட்டிகளில் தோல்வி அடைந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com