பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக சாடும் – ஜுனைத் கான்

வாய்ப்பு தரவில்லை என்ற விரக்தியில் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்தை கடுமையாக சாடியுள்ளார் ஜுனைத் கான்.  இடது கை வேக பந்துவீச்சாளராக 2011 ஆம் ஆண்டு அறிமுகமானார் ஜுனைத் கான். அவ்வப்போது அணியில் சேர்க்கப்படுவதும், நீக்கப்படுவதுமாக இருந்த அவர் கடைசியாக 2019 பாகிஸ்தான் அணியில் விளையாடி உள்ளார். அதற்கு பின் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. 

இதை பற்றி பேசிய அவர் பாகிஸ்தான் அணியில் கேப்டன் மற்றும் அணி நிர்வாகத்துடன் நெருக்கமாக இருந்தால் மட்டும் தான் அணியில் விளையாட முடியும், நீடிக்க முடியும் என்றும் நான் சிறிது ஓய்வு கேட்டேன் அவர்கள் மறுத்துவிட்டார்கள் அதிலிருந்தே நிர்வாகத்திற்கு என் மேல் நல்ல எண்ணம் கிடையாது. அதன் பிறகு எனக்கு ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை எனவும், பெரிய நகரங்களில் இருந்து வந்திருந்தால் பொதுமக்களும், ஊடகமும் ஆதரவு தந்திருப்பார்கள் ஆனால் நான் சிறிய ஊர்களிலிருந்து வந்தவன் எனக்கு யாரும் ஆதரவு தர மாட்டார்கள் என ஆதங்கத்தோடு கூறியிருக்கிறார். 

 

Leave a Reply

Your email address will not be published.

scroll to top

tamilbusinessideas.com