ஐபிஎல் டி20: இன்று பஞ்சாப் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதல்.

இன்று சென்னையில்   ஐபிஎல் தொடர் 14 வது சீசனின் 14வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்  – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. 

கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி வான்கடே மைதானத்தில் விளையாடிய 3 ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் அதிரடியாக விளையாடி  ராஜஸ்தானை நூலிழையில் வீழ்த்தியது. இதையடுத்து இரண்டு ஆட்டங்களிலும் சென்னை, டெல்லி அணிகளிடம் மண்ணைக் கவ்வியது. இப்போது  சென்னை வந்துள்ள பஞ்சாப், இங்கு வெற்றியை நாட திட்டமிட்டுள்ளது. கடந்த 3 ஆட்டங்களிலும் சிறப்பாக ஆரம்பம் இருந்தாலும், ஆட்ட இறுதியில் வெற்றிகரமாக முடிப்பதில் தடுமாற்றம் இருக்கிறது.

 நடப்புத் தொடரில் பஞ்சாப் அதிக ரன் குவித்து இருந்தாலும், பந்துவீச்சில் மட்டும் இன்னும் வேகம் பெறவில்லை. ராகுல், மயாங்க், கேல், ஹூடா, ஷாருக் கான் ஆகியோர் வழக்கம்போல் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கலக்கினாலும் அதே சமயம், ஹாட்ரிக் தோல்வியுடன் வார்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி  கடைசி இடத்தில் பின்தங்கியுள்ளதால் முதல் வெற்றிக்காக வெறியோடு களமிறங்க காத்திருக்கிறது. 

முதல் 3 ஆட்டங்களிலும் கொல்கத்தா, பெங்களூரு, மும்பை அணிகளிடம் தொடர்ச்சியாக குறைந்த ரன் வித்தியாசத்தில்  தோல்வியை சந்தித்து வருவதால் அணி மீதான நெருக்கடியை அதிகரித்துள்ளது. ஐதராபாத் அணி தொடக்கத்தில் அதிரடியாக ரன் குவித்து வெற்றி நம்பிக்கையை ஏற்படுத்தினாலும், கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியைத் தழுவுவது பலவீனத்தை ஏற்படுத்துகிறது. 

இதை சரி செய்ய பின் வரிசையில் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்கள் சிலரை  களமிறக்குவது பற்றி பரிசீலிக்கலாம். முழு உடல் தகுதியுடன் கேன் வில்லியம்சன்  விளையாடினாலே இந்த பிரச்சனைக்கு  தீர்வு கிடைத்து விடும். பந்துவீச்சு ஓரளவு சிறப்பாக இருந்தாலும் வெற்றியை வசப்படுத்த ஐதராபாத் வீரர்கள் அனைத்து துறையிலும் ஒருங்கிணைந்து சிறப்பாக செயல்படுவது அவசியம். கடைசி இரண்டு இடங்களில் புள்ளிப் பட்டியலில் இந்த அணிகள் இருப்பதால்  முன்னேறும் நோக்குடன் மோதும் இப்போட்டியில் அனல் பறப்பது உறுதி.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course