ஐபிஎல் 2021 : விறுவிறுப்பான ஆட்டத்தில் வெற்றி பெற்றது மும்பை இந்தியன்ஸ் அணி

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையில் நடந்த விறுவிறுப்பான போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

 டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை அணி வீரர் துவக்க ஆட்டக்காரர் ருத்துராஜ் விரைவிலேயே ஆட்டமிழந்தார்.  அதன் பின் களமிறங்கிய மொயின் அலி  ஃபாஃப் ட்யுப்ளெஸி கூட்டு சேர்ந்து அதிரடியாக ஆடி அணியை நல்ல நிலைக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் களமிறங்கிய அம்பத்தி ராயுடு தன் அசாத்திய ஆட்டத்தால் ரன்களை மள மளவென உயர்த்தினார். 20 ஓவரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களை எடுத்தது.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி துவக்கம் முதலே அதிரடியாக ஆடியது.கேப்டன் ரோகித் சர்மா அதிக ரன்களை எடுக்காமல் ஆட்டமிழந்தாலும், பொல்லார்ட் அபாரமாக ஆடி  மள மளவென மும்பையின் ஸ்கோரை உயர்த்தினார்.

கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற விறுவிறுப்பான நேரத்தில் பொல்லார்ட் அதிரடியால் 20 ஓவரில் 219 ரன் எடுத்து வெற்றி பெற்றது மும்பை அணி.


Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course