ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் 2021-ல் இன்று நடைபெற்ற 23 வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணியும், வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பேர்ஸ்டோ களம் இறங்கினர். ஆனால் ஐதராபாத் அணிக்கு தொடக்கமே அதிர்ச்சி அளித்தது.

அந்த அணியின் பேர்ஸ்டோ 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டே மற்றும் வார்னர் ஜோடி பொறுமையாக ஆடி ரன்களை சேர்த்தது. வார்னர்  55 பந்துகளுக்கு 57 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த வில்லியம்சன் அதிரடியாக விளையாடினார். மனிஷ் பாண்டே 46 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்தது. வில்லியம்சன் 10 பந்துகளில் 23 ரன்களும், ஜாதவ் 4 பந்துகளுக்கு 12 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.

172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி துவக்க வீரர்கள் கெய்க்வாட் மற்றும் டூ பிளஸ்சிஸ் அதிரடியாக ஆட தொடங்கினர். கெய்க்வாட் 44 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். டூ பிளஸ்சிஸ் 38 பந்துகளில் 56 ரன்களும், மொயின் அலி 15 ரன்களும் எடுத்து வெளியேறினர். இறுதியில் சென்னை அணி 18.3 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ரெய்னா 17 ரன்களுடனும், ஜடேஜா  7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஐதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

சென்னை அணி விளையாடிய 6 போட்டியில் 5 வெற்றி மற்றும் 1 தோல்வி என புள்ளி பட்டியலில் முதலாவது இடத்தை பிடித்துள்ளது. ஐதராபாத் அணி கடைசி இடத்தில் உள்ளது.  

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course