ஷர்துல், புவனேஷ்வருக்கு விருது இல்லையா? விராட் கோலி வியப்பு

 

 

இங்கிலாந்து அணிக்கு எதிராக பூனேவில் பந்து வீசி அசத்திய ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமாருக்கு விருது இல்லாதது கேப்டன் விராட் கோலிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது . இங்கிலாந்து அணியுடன் நடந்த டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என 3 தொடர்களையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தினர்.

புனேவில்  எம்சிஏ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று 2-1 என்ற கணக்கில் கோப்பையை தட்டி தூக்கியது.

இங்கிலாந்து அணி 330 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய நிலையில், ஷர்துல் மற்றும் புவனேஷ்வர் குமார் அசத்தலான பந்துவீச்சை மேற்கொண்டு 4 விக்கெட், 3 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு உதவினார். அதன் எனினும் இந்த போட்டியில் ஆட்டமிழக்காமல் 95 ரன் விளாசிய இங்கிலாந்து பேட்ஸ்மேன் சாம் கரன் ஆட்ட நாயகனாகவும், 3 போட்டியில் 219 ரன் குவித்து முதலிடம் பிடித்த ஜானி பேர்ஸ்டோ தொடர் நாயகனாகவும் விருது பெற்றிருந்தனர்.

இதனை குறித்து  கேப்டன் விராட் கோலி கூறியதாவது: ஷர்துல், புவனேஷ்வருக்கு விருது கிடைக்காதது மிகவும் வியப்பாக உள்ளது. மிகவும் இக்கட்டான, சவாலான சூழ்நிலையில் அவர்கள் இருவரும் அற்புதமாகப் பந்துவீசினார்.

இந்திய வீரர்கள் சில கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது ஏமாற்றமாக இருந்தது. சம்பந்தப்பட்ட வீரர்களுக்கும் இது ஏமாற்றத்தை கொடுத்திருக்கும். ஆனால், விளையாட்டில் இது சகஜமானது தான். மொத்தத்தில் நாங்கள் உத்வேகத்துடன், தன்னம்பிக்கையுடன் செயல்பட்டோம். இறுதியில் வெற்றியையும் வசப்படுத்தினோம். பலம் வாய்ந்த அணிகள் மோதும் போது ஆட்டம் எப்போதுமே விறுவிறுப்பாக அமையும்.

இங்கிலாந்து அவ்வளவு எளிதாக ஆட்டத்தை விட்டு விடாது  என்பது எங்களுக்கு தெரியும். சாம் கரண் அசத்தலாக விளையாடி கடைசி வரை போராடினார். எங்கள் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர். 

 

கடைசி கட்ட ஓவர்களில் எங்களின் பேட்டிங் மிக நன்றாக இருந்தது. முதல் மூன்று வீரர்களில் ஒருவர் சதம் அடித்தால் நிச்சயமாக 370 முதல் 380 வரை குவிக்க முடியும். உலகின் டாப் அணிக்கு எதிராக பெற்ற வெற்றி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்து ஐபிஎல் தொடரில் விளையாடுவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று கேப்டன் விராட் கோலி கூறினார்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course