இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா தொடரை வென்றது

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று பகல்-இரவு ஆட்டமாக நடந்தது.

 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தவான்(67), ரிஷப் பண்ட்(78) மற்றும் ஹர்திக் பாண்டியாவின(64) அதிரடி அரைசதங்களால் 50 ஓவரில் 329 ரன்களை குவித்தது. ஹர்திக் பாண்டியா 39வது ஓவரில் ஆட்டமிழக்குக்கும் போது இந்தியாவின் ஸ்கோர் 265 ரன்கள். பாண்டியா ஆட்டமிழந்த பின்னர் ரன் வேகம் குறைந்தது. இதனால், இந்திய அணி 48.2 ஓவரில்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை சேர்த்தது.  இங்கிலாந்து வெற்றி பெற 330 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் ஜேசன் ராய் மற்றும் பேர்ஸ்டோ சொற்ப ரன்களில்  புவனேஷ்வர் குமார் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர்.  ராய் (14) போல்டானார்.  பேர்ஸ்டோ (1) எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேறினார்.

அதன் பின்னர் சற்று கவனமுடன் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 35 ரன்களில் தவானிடம் கேட்ச் ஆனார்.  இதனால் இங்கிலாந்து அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்கள் எடுத்து திணறியது.

 

 

அதன்பின்பு விளையாடிய டேவிட் மலான் 6 பவுண்டரிகளுடன் அரைசதம் (50) விளாசினார்.  பட்லர் (15), லிவிங்ஸ்டன் (36), மொயீன் அலி (29) மற்றும் ரஷீத் (19) ரன்களில் ஆட்டமிழந்தனர்.  மார்க் வுட் 14 ரன்களில் ரன் அவுட்டானார்.  ஆனால், சாம் கர்ரன் அதிரடியாக விளையாடி 9 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசினார். 95 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேபோன்று ரீசி டாப்ளே (1) ரன்கள் எடுத்தார்.

 

 

50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு இங்கிலாந்து அணி 322 ரன்கள் எடுத்தது.  இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.  இதனால், 2-1 என்ற புள்ளி கணக்கில் இந்தியா தொடரை கைப்பற்றி உள்ளது.

 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top