பரபரப்பான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி

 

இன்றைய ஐ.பி.எல் போட்டியில் பெங்களூரு அணி ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் குவித்தது. 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தவித்தனர். அதிகபட்சமாக  ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர்  54 ரன்களை குவித்தார்.

 

6 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியது பெங்களூரு.

பெங்களூரு அணிக்காக எஸ்.அஹ்மத் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது  சிராஜ் , ஹர்ஷல் படேல் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

 

இத்துடன்  இரண்டாவது முறையாக தோல்வியை  தழுவியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். இரண்டு போட்டிகளிலும் வெற்றியடைந்த பெங்களூரு அணி புள்ளி பட்டியலில் 4 புள்ளிகள் பெற்று  முதலிடத்தில் உள்ளது.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com