தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபிடி வில்லியர்ஸ் தனது ஓய்வு முடிவில் இருந்து விலகப் போவதில்லை என அறிவித்துள்ளர்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபிடி வில்லியர்ஸ் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனாலும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக களம் இறங்கியவர் அதிரடியில் வெளுத்து வாங்குகிறார்.
இந்த நிலையில் அவரை அணிக்குள் இழுக்க தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் முயற்சித்தது. அவரும் அணியில் இணைவது குறித்து தலைமை பயிற்சியாளர் மார்க் பௌண்டச்சேர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டி வில்லியர்ஸ் உடன் கருத்தாய்வு நடத்திய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், ஏபிடி வில்லியர்ஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் தனது ஓய்வு முடிவே இறுதியானது எனவும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ஏபிடி வில்லியர்ஸ் கூறி விட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Puthiyathalaimurai TV Thanthi TV News18 Tamil Nadu News7 Tamil Sathiyam TV Sun News Kalaignar News News J TV Jaya Plus News Captain TV News Polimer News