கள்ளக்காதலின்  வீரியத்தை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

இந்த உணர்வுகளை கையாள்வது ஆண், பெண் இருவருக்கும் கடினமான ஒன்றாகும். முதலில் ஒரு சுய அலசல் மூலம் உங்கள் உணர்வுகளை வகைப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

 

 

 • கள்ளக்காதலுக்கான மனங்கள் உருவாகும் சூழல்
 • கள்ளக்காதலில் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்படும் தருணம்.
 • கள்ளக்காதலில் நடக்கும் முதல் தொடுதல்

ஏன் கள்ளக்காதலில் மாட்டிக் கொள்கிறாள்?

 • பெண் மிக மோசமான மனக்கஷ்டத்தில் இருப்பார்.
 • பெண் மிக மோசமான வெறுமையில் இருப்பார்.
 • பெண் மிக மோசமான பயத்தில் இருப்பார்.

 

 

அதையெல்லாம் போக்க, தட்டிக்கொடுக்க,  அவரை அந்த இருளில் இருந்து மீட்க அங்கே ஒரு ஆண் தற்செயலாகவோ, திட்டமிட்டோ வருவான். அதிலிருந்து மீட்கவோ அல்லது மீட்க உதவுவதோ அல்லது அது பற்றி மனம் திறந்து பேசும் ஸ்பேசை ஆண் உருவாக்கும் போது பெண்ணின் மனம் அட்டை போல் அவன் மேல் ஒட்டிக் கொண்டு காதல் கொள்கிறது.

கள்ளக்காதலில் பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்படுதற்கு முன்னால் பெண் நிறைய நிபந்தனைகள் விதிப்பாள் அது என்னவென்றால் எனக்கு குடும்பம் எல்லாம் இருந்தாலும் உன்னை  நேசிக்கிறேன். நீ என்னை எப்பவும் நேசிக்கனும்  இதுதான் முக்கியமான நிபந்தனை. இந்த நிபந்தனையை அந்த ஆண் ஏற்றுக் கொள்ளும் விதம். அந்த நிமிசம் மிக முக்கியமானது.

முதல் தொடுதல். உடலறவை சொல்லவில்லை. முதல் அணைத்தல், முதல் முத்தம் நடந்த அந்த விநாடியின் இனிமை. இந்த மூன்று காரணிகளும் மிக பக்காவாய் அமைந்துவிட்டால் அந்த மறைக்காதலரை ஆணாதிக்க  சூழலில் வளர்ந்த பெண் மறக்கவே மாட்டார்.

கள்ளக்காதலின் விளைவுகள்:

 

 

இரு குடும்பங்களுக்கும் தெரிய வரும் போது பெரும் பிரச்சனை ஏற்படும். பரஸ்பரமிக்க தம்பதிகள் இடையே அன்பு குறைகிறது. ஆணின் குடும்பம் அவனை மன்னித்து எளிதாக ஏற்றுக் கொள்கிறது. பெண்ணின் நிலை தான் பரிதாபம். குடும்பத்தை இழந்து அவனையும் மறக்க இயலாது மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறாள்.

பெண்களின் உளவியல் சிக்கல்கள்:

 • ஆணிடம் முன்பு மாதிரி என்னை கண்டுகொள்வதில்லை என்பதை நாசூக்காக உணர்த்துகிறார்கள்.
 •  தங்களை அழகுப் படுத்திக் கொண்டு அவனை ஈர்க்க முடியுமா என்று பார்ப்பார்கள்.
 • எனக்கு என்று யாருமில்லை என்று பொதுவான செய்திகளை சொல்லி அவன் திரும்ப பார்க்கிறானா என்று பார்ப்பார்கள்.
 •  ஓகே நீ பேசாவிட்டால் நானும் ஒதுங்குகிறேன் என்று ஒதுங்குவதாக காட்டுவார்கள். ஆனால் ஒரு நாளில் அவன் நினைப்பு வந்து மனது கஷ்டப்படுவார்கள்.
 • நான் இத்தனை நாள் பேசவில்லையே உனக்காக என்னிடம் பேச வேண்டும் என்று தோன்றவில்லையா என்று மெலிதாக சண்டை பிடிப்பார்கள்.
 • எனக்கு உடல்நிலை சரியில்லை “உன் செல்ல நாய்க்குட்டி துடிக்கிறேன், வந்து அன்பு செலுத்த மாட்டாயா” என்று சண்டை பிடிப்பார்கள்.
 • ஏன் என் மனதை கெடுத்தாய். ஏன் இப்போ கண்டுகொள்ளாமல் இருக்கிறாய் என்று ஆணிடமே கதறுவார்கள். என்னால் உன்னை மறக்க முடியவில்லை என் கூட டச்ல இரு. என்னைநேசி. நான் உன்னை ரொம்ப நேசிக்கிறேன். இது புரியலையா உனக்கு என்று கெஞ்சுவார்கள்.

உங்கள் காதலர் உண்மையில் வேறு பெண்களோடு தொடர்பு இல்லாதவரா. அது நிச்சயமாக இல்லை என்று உங்களுக்கு தெரியுமா என்ற கேள்விக்கு முக்கால்வாசி பெண்கள் பதில் அளிக்க மாட்டார்கள்.

 • “இல்ல அவரு அப்படியெல்லாம் இல்ல”.
 • “இல்ல அவருக்கு என்ன மட்டும்தான் பிடிக்கும்”.
 • “அவரு நிறைய பேர்கூட பழகுவாரு ஆனா என்னதான் ரொம்ப பிடிக்கும்”.
 • “தெரியல ஆனா என்கூட நல்லா அன்பா பழகுறாருன்னு நினைக்கிறேன்”.

ஏதோ ஒரு வகையில் அவர்கள் மனசாட்சியிடம் இருந்தே அவர்கள் ”கள்ளக்காதலரை” பாதுகாக்கும் அவசரம் தெரியும். எங்கே தன் மனதே அவரை தவறாக நினைத்து அவர் மேல் உள்ள காதல் போய்விடுமே என்று உண்மையை தெரிந்து கொள்ளாமல் இருக்க ஆர்வம் காட்டுவார்கள்.

இந்த கள்ளக்காதல் உணர்வு மிகவும் அபாயமானது . ஒரே நேரத்தில் பெண்ணை உச்சாணிக் கொம்புக்கு கொண்டு செல்லும் குறிப்பாக ஆரம்ப காலத்தில் மட்டும்.  வாழ்க்கையில் பிரச்சினைகள் தலைதூக்கும் போது பெண்ணின் நிம்மதி, அந்தஸ்து என அனைத்தும் அவளது வாழ்க்கையில் கேள்விக்குரியாகிறது.

நெருப்பு  காய்வது போல அளவான தூரத்தில் பழகும் போது அந்த ஆண், பெண் நட்பு அழகாக சாத்தியம் உள்ளது. எப்படி பழகினாலும் பெண்ணுக்கு தான் பிரச்சினைகள் வரும் என்பதால் கண்ணாடி பாத்திரத்தை கையாளுவது போல எச்சரிக்கை உடன் பெண் பழக வேண்டும். ஆயிரம் முறை பெண் விடுதலை பற்றி பேசினால் கூட கடைசியாக  இழப்பு பெண்களுக்கு தான்.

பணமே பிரதானம் என்று  கணவன் மனைவியை கண்டுகொள்ளாமல் இருப்பது தான் பெரும்பாலான முறை தவறிய காதலுக்கு காரணம். ஆகவே குடும்ப வாழ்க்கையில் இருக்கும் ஆணும், பெண்ணும் , குடும்ப வாழ்க்கை தொய்வுறும் போது சுதாரித்து கொண்டு பழைய காதலை மீட்டெடுத்தாலே போதுமானது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top