திருமண தம்பதிகளின் படுக்கையில் ஆர்வத்தை தூண்டும் சில வகை உணவுகள்

படுக்கையறையில் திருமண தம்பதிகளின் ஆர்வத்தை தூண்ட சில வகை உணவுகளால் உறவுகளை பலப்படுத்தவும்,செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தவும் முடியும். கணவன் மனைவி உறவுகளுக்கு இடையேயான மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு அவர்களிடையேயான தாம்பத்திய உறவும் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.

தாம்பத்ய உறவை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள ஆர்வமும், செயல்பாடும் அவசியமானதாகும். தாம்பத்திய உறவின் ஆர்வத்தை தூண்டவும், செயல்பாட்டுத்திறனை மேம்படுத்தவும் சில உணவு வகைகளால் முடியும். உலகளாவிய உணவியல் நிபுணர்கள் அது பற்றி தெரிவிக்கும் கருத்துக்களை பார்ப்போம். 

திருமணமான புதிய தம்பதிகளுக்கு பிரான்ஸ் நாட்டில் உள்ள கிராமப்பகுதிகளில் இப்போதும் ஸ்ட்ராபெர்ரி பழ சூப் கொடுத்து வரவேற்கிறார்கள். தேனிலவு நாட்களை அவர்கள் மகிழ்ச்சிகரமாக  கொண்டாட இந்த பழங்களில் இருக்கும் சத்து மிகவும் துணை புரிகிறது.

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின்-சி சத்து தான் அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் மோகத்தை தூண்டும் இந்த பழங்களை ஒரு கோப்பை நிறைய அள்ளி வைத்துக்கொண்டு அருகிலே கிண்ணம் நிறைய கிரீமை நிரப்பி, அதில் ஸ்ட்ராபெர்ரி பழங்களை முக்கி திருமணதம்பதிகள் படுக்கைக்கு செல்லும் முன்பு சுவைப்பார்கள்.

உலகமே தாம்பத்ய உணர்வைத் தூண்டும் உணவுப்பொருளாக ஏலக்காயை கொண்டாடுகிறது. அரேபிய வியாபாரிகள் ஏலக்காயை ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்யும்போது தாம்பத்ய மருந்து என்றே விற்பனை செய்கிறார்கள். தாம்பத்ய உறவுக்கு முன்பு சிறந்த மணத்துடன் வாயுவுக்கு எதிராக செயல்படும் ஏலக்காயை சாப்பிடவேண்டும்.

இந்தியாவின் முதல் செக்ஸ் நிபுணரான வாத்சாயனார் தம்பதிகள் முத்தத்தை தொடங்குவதற்கு முன்னால் ஏலக்காயை உட்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். ஏலக்காயும், வெற்றிலையும் சேர்ந்த கலவை வாய் சுகாதாரத்திற்கு ஏற்றதாக இருக்கிறது.

பூண்டுவுக்கும் தாம்பத்ய ஆற்றல் சக்தியை மேம்படுத்தும் திறன் இருக்கிறது. பல்வேறு நாட்டு ஆண்களிடம் பூண்டுவையும், மல்லித்தழையையும் சேர்த்து இடித்து, நாட்டு மதுபானத்தில் கலந்து குடித்துவிட்டு உடலுறவு கொள்ளும் பழக்கம் பழங்காலத்தில் இருந்திருக்கிறது.

 பூண்டுவில் இருக்கும் தாம்பத்ய உறவு சக்தி பற்றி கிரேக்க தத்துவ விஞ்ஞானியான அரிஸ்டாட்டிலும் கூறியிருக்கிறார். பூண்டுவுக்கு ஆண்மை உத்வேகத்திற்கு எதிராக இருக்கும் தடைகளை போக்கும் ஆற்றல் இருப்பதாக ஆயுர்வேதமும் குறிப்பிடுகிறது. ஆணுறுப்பில் இருக்கும் தமனிகளில் ஏற்பட்டிருக்கும் தடைகளை போக்கும் மருந்தாக செயல்படும் பூண்டுவை அப்படியே பச்சையாக சாப்பிடக்கூடாது. சிறிதளவு பூண்டுவை நல்லெண்ணெய்யிலோ அல்லது பசு நெய்யிலோ வறுத்து சாப்பிட்டால் நல்ல பலன் தரும்.

காதல் உணர்வை தூண்டும்போது அதை மேலோங்கச் செய்யும் சக்தி பி.ஈ.ஏ என்ற அமினோ அமிலத்துக்கு உண்டு. இந்த அமிலம் காதல் வசப்படும்போது சுரக்கிறது. இந்த அமிலமானது தரமான சாக்லேட்டை உண்ணும்போது சிறிதளவு கிடைக்கிறது.

இது விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்படவில்லை ஆனாலும் சாக்லேட் சாப்பிட்டால், சந்தோஷமான மனநிலையை உருவாக்கும் செரடோனின், டோபமின் போன்ற ரசாயனங்கள் உருவாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். கருப்பு சாக்லேட்டில் பொதுவாகவே  ஆன்டி ஆக்சிடென்ட் சக்தி இருக்கிறது. அதனால் திருமணதம்பதிகள் அளவோடு சாக்லேட் சாப்பிடலாம்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top