டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பிரச்சினைகள்!

டீன் ஏஜ் குழந்தைகள் பல்வேறு எதிர்பார்ப்புகள் உடனே வளருகிறார்கள். ஹார்மோன்களின் சதியால் அழகு, காதல், நட்பு, சினிமா, ஆடைகள் என்று ஏதோவொரு கனவிலே திளைக்கிறார்கள். துரதிர்ஷ்டவசமாக இந்த காலக்கட்டத்தில் தான் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய காலக்கட்டம்.

டீன் ஏஜ் பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள்

Yeenage Children

* தங்களுக்கு தேவையானவைகளைத் தாங்களே தேர்வு செய்யும் உரிமையை கொடுக்க வேண்டும். ஆடை, கல்வி, வேலை, திருமணம் என்று வரும் போது தனது விருப்பத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள்.

* தங்களுடைய தனித்தன்மையை வெளிப்படுத்த வாய்ப்புகள் அளிக்க வேண்டும். உதாரணமாக பாடல், நடனம் விளையாட்டுகளில் சாதிக்க நினைக்கும் பிள்ளைகளை படிப்பு, சமூகம், திருமணம் என்று காரணம் காட்டி தடுப்பது பிடிப்பதில்லை.

* தங்களை சிறுபிள்ளை போல நடத்தக் கூடாது.

* பெற்றோர்களின் விருப்பங்களையும், கனவுகளையும் தங்கள் மீது திணிப்பதை விரும்புவதில்லை.

* பொதுவெளியில் தங்களை கௌரவமாக நடத்த வேண்டும்.

* தங்களையும், தங்கள் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்திக் கொள்ள போதிய வாய்ப்பும், அதை பெற்றோர்கள் புரிந்து கொள்ளவும் வேண்டும்.

பெற்றோர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை
* முரட்டுத்தனமான கண்டிப்பான போக்கை கைவிடல் நன்று.

* வளரிளம் பெண்/ஆணிடம் சுயசிந்தனையும், சுயமாய் செயல்படும் திறமையும் இருக்கிறது என்பதை உணர்தல் வேண்டும். அதனை நியாயமான முறையில் ஊக்குவிக்க வேண்டும்.

* வீட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கும் போது பெண் குழந்தையின் கருத்தினையும் கேட்டுப்பெறுதல் வேண்டும்.

* குழந்தைகளிடையே பிரிவினை பார்க்க கூடாது.

* ஆண்குழந்தை என்று சலுகையும், பெண் குழந்தை என்று உரிமையை மறுக்கக்கூடாது.

* தெரிவு செய்யும் உரிமையை அளித்தல் வேண்டும்.

* தன்னுடைய உரிமையை (படிப்பு, வேலை, நண்பர்கள்) கேட்டுப்பெற்றாலும், தனக்குள்ள பொறுப்புகளை உணர்ந்து  செயல்படும் போது முழு மனதோடு அனுமதி கொடுங்கள்.

* பெண் குழந்தைகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஊட்டும் கடமை ஒவ்வோர் தாய்க்கும் உள்ளது.

* பெற்றவர்கள் விருப்பு, வெறுப்பு, கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் பெற்ற பிள்ளைகளிடம் இலைமறை காயாக பகிர்ந்து கொள்ளுதல் நல்லது.

* பிள்ளைகளை சந்தேகப்பட்டு ஆராய்வதோ, விசாரணை செய்வதோ வேண்டாம். ஆனால் எப்போதும் உங்கள் கவனம் அவர்கள் மீது இருக்கிறது என்பதை குழந்தைகளுக்கு உணர வைத்து விடுங்கள்.
Good Parenting

* தன் பிள்ளை ஒருபோதும் தவறு செய்யமாட்டான் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். தங்கள் ஆதரவு எப்போதும் அவர்களுக்கு உண்டு என்பதை புரிய வைத்தல் வேண்டும்.

* வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிள்ளைகள் பெரும்பாலும் தடம் மாறுவதில்லை.

* தவறு செய்த பிள்ளையை மன்னித்து, திருந்தி வாழ வாய்ப்பு கொடுங்கள். ஒருபோதும் குத்திக்காட்டி பேசாதீர்கள்.

* மற்ற பிள்ளைகள் உடன் ஒப்பிடும் வழக்கத்தை கைவிடுங்கள்.

மொத்தத்தில் டீன் ஏஜ் பருவம் என்பது ஓர் சோதனை காலகட்டம். கண்ணாடி பாதையில் நடந்து சென்று வாழ்க்கை லட்சியத்தை அடைய வேண்டும். தவறான ஒவ்வொரு அடியும் தனக்கான படுகுழி என்பதை பிள்ளைகள் உணர வேண்டும்.

பெற்றோர்கள், டீன் ஏஜ் குழந்தைகளிடம் அன்பும், பரிவும், நம்பிக்கையை ஏற்படுத்தி ஊக்கப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.


Adolescence or Teenage typically describes the years between ages 13 and 19 and can be considered the transitional stage from childhood to adulthood. This period can bring up issues of independence and self-identity, any adolescents and their peers face tough choices regarding schoolwork, sexuality, drugs, alcohol, and social life. There are a lot of reasons for the problems that happen between teenagers and parents. But the biggest ones are media and technology, where child and teenager can make their secret life. To solve the problem, children must be a good listener and respect parents whereas parents have to control emotions, build their self-esteem and make them feel loved.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course