உங்கள் காதல் எந்த வகை?

இருபதில் கட்டுகடங்காதது,
நாற்பதில் பக்குவபட்டது,
அறுபதில் அனுபவபட்டது
என காதலை பலவாறு வகைப்படுத்தியுள்ளார்கள். காதல் நம்மைப் படுத்தும் பாடு சொல்லி மாளாது. எந்த வயதிலும், எவருக்கும், எப்போது வேண்டுமானாலும் காதல் வரும். காதல் எனும் தேனை சுவைக்காதோர் மானிடரே அல்ல.

காதல் என்பது என்ன?

காதல் எனும் உணர்வு இரண்டு ஆன்மாக்களை இணைக்கும் பாலம். ஒரு மனம் நினைப்பதை மறு மனம் உணர்வது தான் காதல். கம்பியில்லா தந்தி போல உணர்வுகளை கடத்திக் கொண்டு இருக்கும் உள்மனம், அதை உணர்ந்து வெட்கித் தன்னுள்ளே கொண்டாடி தீர்க்கும் காதல் மனம். காதலை வர்ணிக்க வாழ்நாள் போதாது.

இது ஒரு அழகிய கண்ணாடி மாளிகை. இதனுள்ளே நுழைய எல்லோரும் ஆசைப்படுவார்கள். நுழைந்த பெரும்பாலானோர் தவித்து வெளியேற துடிப்பதும் உண்டு என்பதே துரதிர்ஷ்டம். காதலால் உயர்ந்தவர்களும் உண்டு, காதலால் உருக்குலைந்தவர்களும் உண்டு. களவு மட்டும் அல்ல காதலையும் கற்றுணர்ந்து கடந்து போக வேண்டும்.

காதலின் வகைகள்

ஏழை காதல், பணக்கார காதல், சாதி மறுப்பு காதல், மதம் மாறிய காதல், ஏமாந்த காதல், ஏமாற்றிய காதல் இவையெல்லாம் காதலின் வகைகள் என்று பொதுவாக ஒரு எண்ணம் உண்டு. நம்ம ஊர் சங்க இலக்கியங்களில் காதலை வகைப்படுத்தியது போல கிரேக்கர்கள் காதலை வகைப்படுத்தி உள்ளார்கள். அக்கரை சீமையில் கூறியதையும் பார்ப்போமே!

* உடல் மீதான காதல் (Eros love)

கிரேக்க காதல் மற்றும் காமக் கடவுளான “ஈரோஸ்”, தங்க அம்புகளை காதலர்கள் மீது எய்துவாராம். நம்ம ஊர் மன்மத ராசா போல. கிரேக்கர்கள் இந்த வகை காதலை கண்டு அஞ்சினர். ஏனெனில் காதலர்கள் உடல் கவர்ச்சியால் ஈர்க்கப்படுவதை விரும்பவில்லை.

* உறவு சார்ந்த காதல் (Platonic love)

Relationship

மனம் சார்ந்த காதலைத்தான் platonic love என்கிறார்கள்.நெருங்கிய நண்பன், இரத்த பந்தங்கள் மீது வரும் காதல், உடல் சார்ந்த விருப்பங்களுக்கு அப்பாற்பட்டது.

* விளையாட்டு காதல் (Ludus love)

இன்றைய நவீன கால காதல் என்றே கூறலாம். இருவர் சேர்ந்து பிரியாமல், ஒருவருக்கொருவர் கேலி, கிண்டல் விளையாட்டுகள் என்று இனிமையாக பொழுது போக்குவது தான் Ludus love.

* நீண்ட கால காதல் (Pragma: Longstanding love)

நமது ஊர் arranged marriage ல் தோன்றும் காதல் தான். நீண்டநாள் தொடர்ந்து இருவர் தொடர்பில் இருக்கும் போது, தன்னையறியாமல் ஒருவரையொருவர் புரிந்து, ஈர்க்கும் காதல் இது.

* ஆத்மாவின் காதல் (Agape: Love of the soul)

தன்னலமில்லாத காதல், எவரிடமும் எதையும் எதிர்பாராமல், தனது அன்பை மட்டும் பிறருக்கு வாரி வழங்கும்
காதல். இத்தகைய மனிதர்கள் நம் வாழ்வில் கிடைக்க பெறுவது வரம். இன்றைய உலகில் இவர்களது தேவையே அதிகம்.

* சுயநலக்காதல் (Philautia: Love of the self)

Love of the self

இந்த வகை காதலை கிரேக்கர்கள் இரண்டு விதமாக பிரித்து உள்ளனர். ஒருவகையினர் புகழ், மகிழ்ச்சி, சொத்து இதன் மீதான காதல் கொண்டிருப்பர். இன்னொரு வகையினர் தன்னை மிகவும் நேசிப்பவர். தன்னை நேசிப்பவனாலே பிறரையும் நேசிக்கமுடியும். காரியக்கார காதலர் தான் இவ்வகையினர்.

* பெற்றோர் – குழந்தைகள் காதல் (Storge: Love of the child)

Love of child

நம் பெற்றோர் நம்மீது வைத்திருக்கும் காதல். இந்த வகை காதல் தியாகங்களால் நிரம்பிய பிரதிபலன் பாராத காதல். பிள்ளைகளை வாழ்வில் உயர்த்த தன்னை உருக்கும் மெழுகுவர்த்திகள் தான் பெற்றோர். உன்னதமான காதல்களில் இதுவும் ஒன்று.

உணர்ச்சிகளைக் கடத்தாமல், உணர்வுகளை கடத்தும் நேசமே உன்னதமானது.


Love is defined as an intense feeling of affection for someone, which means that you view someone as awesome and desirable based on your beliefs, judgments, and experiences. Affection, attraction, infatuation, or fondness is a “disposition or state of mind or body” that is often associated with a feeling or type of love. There are different types of love based on Greek. Eros is love of the body. Philia is love of the mind. It represents the sincere and platonic love. Ludus is playful love, Pragma is longstanding love, Agape is love of the soul, Philautia is love of the self. Storge is love of the child.


scroll to top