திருமணத்திற்கு திட்டமிடும் போதே தேனிலவு செலவுகளையும் சேர்த்தே திட்டமிடுகின்றனர். இன்றைய இளம் தலைமுறையினரின் பொருளாதார தன்னிறைவும் ஒரு காரணம். பெற்றோர் திருமணம் நடத்தி வைத்த காலம் போய், பெற்றோரிடம் திருமணத்திற்க்கான அனுமதி கேட்பது கூட கடமைக்கு என்பதாகி விட்டது .
தேனிலவு பேக்கேஜ் டூர்களில் அட்வென்ஜர் டிரிப் ஐ தேர்ந்தெடுக்கும் தம்பதிகளை பார்த்தால் ஆச்சரியம் தான். இளவட்டக்கல்லை தூக்கியும், காளை மாட்டை அடக்கியும் வீரன் என நிருபித்து பெண் கட்டிய ஜீன் உள்ள தம்பதிகள் போல, போன ஜென்ம நினைவு தொடர்ந்து வருகிறது போல.
தேனிலவின் முக்கியத்துவம்
தேனிலவு என்ற நிகழ்வு வெள்ளைக்காரன் தந்தது தானே! தேனிலவு காதல் திருமணங்களுக்கு தேவையோ இல்லையோ பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்த திருமணத்திற்கு அவசியம் தேவை. திருமண சடங்குகள் சம்பிரதாயங்கள் என்று உறவுகள் படுத்தி எடுத்த அலுப்பு, இதில் குடும்பத்தினரின் ஈகோ சண்டைகள், வீடு நிரம்பிய உறவுகள் என்று தம்பதிகளுக்கு தனிமை என்பது அத்திபூத்தாற் போலத்தான்.
தம்பதிகளுக்கிடையே உள்ள மனத்தடைகள், வெட்கம் நீங்கி இயல்பாக தேனிலவு தரும் தனிமை அவசியம். சம்சாரக்கடலில் இறங்கிய பின்னர் அலை என்று ஓய்ந்து கரை திரும்பி ஓய்வெடுக்க என்ற நிலையே நிதர்சனம். ஆகவே இந்த தேனிலவு தரும் ஸ்பரிசங்கள், காதல் பிதற்றல்கள், மோக தீண்டல்கள் பசுமரத்தாணி போல இருவருக்கும் பதிந்து விடும்.
திருமணம் தந்த உரிமை
தனிமையை பயன்படுத்துங்கள்
தேனிலவை கொண்டாடுங்கள்
இயற்கையோடு இணைந்து காதலை பகிருங்கள். மலைவாசஸ்தலத்தின் இதமான சூழலும், ரம்மியமான பூத்துக்குலுங்கும் காட்சிகள், திணறடிக்கும் குளிரும், அளவிலாத தனிமையில் ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன் மனதளவில் கதாநாயகன், கதாநாயகி ஆவது இந்த நாட்களிலே.
ஆசைப்பட்டு கட்டிய பெண் அருகில் இருக்கும் போது, காலைக் கணக்குப் பார்க்காமல் பரிசுகளால் அவளைத்திணறடியுங்கள். உங்கள் காதலால் திக்குமுக்காட வையுங்கள் ஹீரோ சார். நீங்கள் உங்கள் துணைக்காக செலவழிக்கும் நேரம், அன்பு, பரிசுகள், விருந்துகள் எதுவுமே செலவில்லை அத்தன்னையும் முதலீடு தான். ஆயுளுக்கும் அறுவடை செய்யப்போகிறீர்கள் என்பது திண்ணம்.
தேனிலவில் பாதுகாப்பு
புதிய இடம் ஒரு பெண்ணை கைநிறைய காசுடன் தனியாக சுற்றி வருகிறோம் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். தங்கும் விடுதி பாதுகாப்பும், சுகாதாரமான இடமாக ஓரளவிற்கு முக்கிய இடத்தில் இருக்கும்மாறு தேர்ந்தெடுக்கவும்.
பணத்தை மூன்று வெவ்வேறு இடங்களில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளவும். லேப்டாப், நகைகள் என்று விலையுயர்ந்த பொருட்களை தேனிலவு பயணத்தில் தவிர்த்தல் நல்லது.
நீங்கள் தேனிலவுக்கு சென்ற ஊரின் அருகில் உள்ள உறவினர், நண்பரின் தொலைபேசி எண் கைவசம் கொண்டு செல்வது நலம். உங்கள் துணையிடமும் சிறிது பணம் கொடுத்து வையுங்கள்.
நல்ல தரமான ஹோட்டல்களில் உணவை சாப்பிடுங்கள். பொது இடங்களில் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பது நன்று.
தனிமை என்று ஆசைப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு செல்லாதிர்கள். எவ்வளவு திடகாத்திரமான ஆணாக இருந்தாலும் தெரியாத இடங்களில் எவருக்கும் கடினமே!
எச்சரிக்கை போர்ட்களை மதித்து, அதிலுள்ள பாதுகாப்பு விதிகளை கடைப்பிடியுங்கள்.
குடிப்பழக்கம் உள்ள ஆண்கள் தயவுசெய்து புது இடத்தில், புதுப்பொண்ணுடன் இருக்கும் போது தவிர்க்க வேண்டும்.
இன்பமயமான அனுபவங்களுடன் தேனிலவு பயணம் இனிக்க வேண்டும் எனில் சரியான திட்டமிடல், செயல்படுதல் முக்கியம். வாழ்வின் இறுதி மூச்சு வரை இணைந்து இருக்கும் தம்பதிகளுக்கு இந்த பயணம் ஒரு டிரெய்லர் தான்.
A honeymoon is generally seen as a time to relax after the wedding. It is the traditional vacation taken by newlyweds to celebrate their marriage in intimacy and seclusion. Going on a honeymoon is a way to create new memories, while you trust each other and explore each other’s unfamiliar territories. When you are away from the family and friends, you get time only for the both of you. In this span, you can understand them and know their likes and dislikes as well. It will also make you cautious about each other’s comfort level.