மாமியார்-மருமகள் உறவு சிறக்க என்ன செய்ய வேண்டும்?

ஒவ்வோர் உறவும் ஒவ்வொருவிதமான அன்பினை வெளிப்படுத்துபவை. உறவுகளுக்கு ஒரு மிக முக்கியமான இடத்தை நமது பண்பாடும் பாரம்பரியமும் வழங்கியிருக்கின்றன. நமது வாழ்வில் உறவுகளை தவிர்த்து எந்த ஒரு நிகழ்ச்சியும் நம் வீடுகளில் நடைபெறுவதில்லை.

கணவன்-மனைவி, அப்பா-மகன்-மகள், மாமன், மைத்துனன், கொழுந்தியாள், சிற்றப்பா, சித்தி, தாத்தா-பாட்டி, பெரியப்பா-பெரியம்மா, சித்தி-சித்தப்பா, அத்தை-மாமா, அண்ணன்-அண்ணி, அக்கா-அத்தான், தம்பி, தங்கை என எத்தனை உறவுகள் நம்மை சுற்றி. அதிலும் பெரும் புகழ் பெற்ற உறவு என்பது மாமியார்-மருமகள் உறவு தான்.

மாமியார்-மருமகள் உறவு

காலங்காலமாகவே மாமியார்-மருமகள் உறவு என்பது சிக்கல் மிகுந்ததாக உள்ளது. தானே விரும்பி அழைத்து வரும் பெண்ணை தன் வாழ்நாள் எதிரியாக நினைக்கும் அளவிற்கு மோசமாகும் இந்த உறவு உண்மையிலே ஆய்வுக்குரியது.

மகனின் மீதான உரிமை, தன்னுடைய சாம்ராஜ்யத்தில் நுழைந்த புதிய உறவு, தன்னை விட படிப்பு, வருமானம், வேலை ஏதோவொன்றில் உயர்ந்த பெண, தனக்கான மதிப்பும், மரியாதையும் குறைந்து விடுமோ என்ற பயம், இவற்றில் ஏதாவது ஒரு காரணம் போதுமானதாக இருக்கிறது இந்த உறவு சிக்கலாக.

உறவுச்சிக்கல்களை தவிர்த்தல்

இந்த உறவுச்சிக்கலை தவிர்ப்பது என்பது இரு பெண்களின் புரிதல், முயற்சியில் தான் இருக்கிறது.

Relation

* தன் மகள் போலவே எண்ணும் மாமியார், தன் தாய் போல நினைக்கும் மருமகள் என்று நினைக்கும் அளவிற்கு சம்பந்தப்பட்ட பெண்கள் மனதளவில் தயாராக வேண்டும்.

* ஒவ்வொரு வீட்டு வேலைகளை கற்றுக் கொள்ளும் ஆர்வத்தில் மருமகளும், தவறுகளை மன்னித்து பொறுமையுடன் கையாளும் மாமியாராக இருத்தல் அவசியம்.

* புதுமணதம்பதியரின் இடையே மூக்கை நுழைக்காமல் தகுந்த இடைவெளி விட்டு விலகி நிற்க தெரியவேண்டும் தாய்க்கு.

* மாமியார் கணவனைக் கண்டித்ததால், அம்மா பிள்ளை உறவு என்று விலகி இருக்க தெரிய வேண்டும் மருமகளுக்கு.

* எல்லாவற்றுக்கும் மேலாக அம்மாவையும், மனைவியையும் சரியாக கையாளத் தெரிந்த ஆண்மகனின் கையில் தான் இருக்கிறது குடும்ப நிம்மதி.

Mother-in-law

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பது போல எந்தவொரு உறவிலும் குறைகளை பொருட்படுத்தாமல் , அன்பினால் அணுகினால் மட்டுமே அந்த உறவு நீடிக்கும். நாணல் போன்று இடம், பொருள், சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ளும் வித்தை அறிந்தவர்கள் பாக்கியசாலிகள்.


One of the biggest challenges of married life is to get along well with your in laws. Though this goes for both partners in a marriage, it is the woman who is affected the most. According to research around 60 per cent of all marriages suffer from tension with mothers-in-law that is normally between the woman and her husband’s mother. The situation that helps here is to have a positive attitude and to show respect to the older woman. Mother-in-law has to treat her as she would a daughter and should be involved, be trustworthy and be approachable. By following the above steps, both can excel in mother-in-law  and daughter-in-law relationship.


scroll to top