வேளச்சேரி தொகுதியில் மறு வாக்குப்பதிவு – தேர்தல் ஆணையம் அறிவிப்பு.

 

 

சென்னையில் உள்ள வேளச்சேரி தொகுதியில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த வாக்குச்சாவடியில்  வாக்குப்பதிவு முடிந்த பிறகு வாக்கு இயந்திரங்களை மூன்று ஊழியர்கள் சேர்ந்து  இருசக்கர வாகனத்தில் வைத்து எடுத்து செல்லப்பட்டதன் தொடர்பாக ஏற்கனவே புகார் இருந்தது. இந்த தொகுதியில் வாக்குச்சாவடி எண் 92-ல் வரும் 17 ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

வழக்கம் போல் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மறுவாக்குப்பதிவு நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

 

 இது தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில் :

 

இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட விவிபேட் இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவுக்காக 50 நிமிடங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளது. பிறகு, விவிபேட்டில் கோளாறு ஏற்பட்டதால், வேறு விவிபேட் மாற்றப்பட்டு உள்ளது.

 

சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடியில் 200 ஓட்டுகள் இருக்கும் நிலையில், இந்த இயந்திரத்தில் 15 ஓட்டுகள் பதிவாகி உள்ளது. இரு சக்கர வாகனத்தில் விவிபேட் எடுத்து சென்றது விதிமீறல். எனவே, வேளச்சேரி ஓட்டுச்சாவடியில் மறு ஓட்டுப்பதிவு நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கும். இரு சக்கர வாகனத்தில் இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கொண்டு செல்லப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது என்று கூறியிருந்தார். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course