தமிழக சட்டசபை தேர்தலுக்கான சேலம் மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல்…!!!!

 

சேலம் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய 10 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில், திமுக கூட்டணியில் ஓமலூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் விவரம்:
சேலம் தெற்கு:

வேட்பாளர்: ஏ.எஸ்.சரவணன் (49)

ஊர்: களரம்பட்டி, சேலம்

கல்வித்தகுதி: 7ஆம் வகுப்பு

கட்சிப் பதவி: தாதகாப்பட்டி பகுதி செயலாளர்

தொழில்: ஜவுளி ஏற்றுமதி

சேலம் வடக்கு:

வேட்பாளர்: ஆர்.ராஜேந்திரன் (62)

ஊர்: சேலம்

கல்வித்தகுதி: பி.ஏ., பி.எல்.,

கட்சி பதவி: சேலம் மத்திய மாவட்ட செயலாளர்

தொழில்: வழக்கறிஞர், விவசாயம்

சேலம் மேற்கு:

வேட்பாளர்: ஏ. ராஜேந்திரன் (53)

ஊர்: சேலத்தாம்பட்டி

கல்வித் தகுதி: 8 ஆம் வகுப்பு

கட்சிப் பதவி: தலைமை பொதுக்குழு உறுப்பினர், சேலத்தாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர்.

தொழில்: வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்.

எடப்பாடி:

வேட்பாளர்: சம்பத்குமார் (37)

ஊர்: கொங்கணாபுரம்

கல்வித் தகுதி: பட்டதாரி

கட்சிப் பதவி: சேலம் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்

தொழில்: விவசாயம்

கெங்கவல்லி (தனி):

வேட்பாளர்: ஜெ.ரேகா பிரியதர்ஷினி (38)

கணவர்: பாபு (துணை ஆட்சியர்)

ஊர்: சேலம்

கல்வித்தகுதி: எம்ஏ., எம்பில்., எம் ஏ (பொது நிர்வாகம்), பி ஹெச்.டி.,

தொழில்: குடும்பத் தலைவி

ஆத்தூர் (தனி):

வேட்பாளர்: ஜீவா ஸ்டாலின் (32)

கணவர்: ஸ்டாலின்

தொழில்: விவசாயம், ரியல் எஸ்டேட்

ஊர்: ஆத்தூர்

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு

கட்சிப் பதவி: 9வது வார்டு மகளிரணி செயலாளர்

ஏற்காடு (தனி):

வேட்பாளர்: சி. தமிழ்செல்வன் (50)

ஊர்: பேளூர்

தொழில்: விவசாயம்

மேட்டூர்:

வேட்பாளர்: எஸ்.ஸ்ரீனிவாச பெருமாள் (47)

ஊர்: மேச்சேரி

கல்வித் தகுதி: பிளஸ் 2

கட்சி பதவி: மேச்சேரி ஒன்றிய பொறுப்பாளர்

தொழில்: திரையரங்க உரிமையாளர்

சங்ககிரி:

வேட்பாளர்: கே.எம்.ராஜேஷ் (41)

ஊர்: சங்ககிரி

கல்வித் தகுதி: பட்டதாரி

கட்சிப் பதவி: ஒன்றிய பொறுப்பாளர்

தொழில்: பள்ளிக்கூடம், பேருந்து உரிமையாளர்

வீரபாண்டி:

வேட்பாளர்: மருத்துவர் கே.தருண் (40)

ஊர்: சேலம்

கல்வித் தகுதி: எம்பிபிஎஸ்., எம் எஸ்., எம்பிஏ.,

கட்சி பதவி: தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில துணைச் செயலாளர்

தொழில்: மருத்துவர்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top