கேரள மக்களுக்கு மாபெரும் வெற்றியை சமர்ப்பித்த பினராயி விஜயன்

கேரள சட்டசபைக்கான 140 தொகுதிகளில் தேர்தல் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. 14 மாவட்டங்களை கொண்ட 140 உறுப்பினர்களை உள்ளடக்கிய சட்டசபைக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது.


கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த தேர்தலை விட கூடுதலாக 6 தொகுதிகளை கைப்பற்றி இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சியை தக்க வைத்து கொண்டது. இதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வீழ்ச்சி கண்டுள்ளது.

திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் மாபெரும் வெற்றியை நான் கேரள மக்களுக்கு தாழ்மையுடன் சமர்ப்பிக்கிறேன் என்று  கூறியுள்ளார். கொரோனா தொடர்ந்து வேகமாக  பரவி வருவதால் இது கொண்டாடும் நேரமில்லை என்றும் கொரோனாவுடன் போராடும் நேரம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 
Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course