முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமிக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு – உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை திமுக நிர்வாகி மீது அவதூறு பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கை  முதலமைச்சர் பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை திமுக நிர்வாகியான சூலூர் ஏ.ராஜேந்திரன் கடந்த ஆண்டு மார்ச் 19 ஆம் நாள் சென்னையில் இருந்து கோவைக்கு ரயிலில் சென்றார். அவருக்கு நீரிழிவு பாதிப்பு இருப்பதால் மேல் படுக்கையிலிருந்து கீழே இறங்கும் போது நிலை தடுமாறி கீழ்  படுக்கையில் இருந்த பெண் மீது விழுந்ததாக கூறப்படுகிறது.


இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் மற்றும் காவல் துறையில் அந்த பெண் வாய்மொழி புகார் அளித்த நிலையில் தனது செயல்பாடு உள்நோக்குடன்  நிகழ வில்லை எனவும் நீரிழிவு பாதிப்பு இருப்பதால் அவசரமாக இறங்கிய தாகவும் சூலூர் ராஜேந்திரன் அந்த பெண்ணிடம் விளக்கமளித்தார். இதையடுத்து தன் புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டாம்  என அந்த பெண் தெரிவித்துள்ளார். ஆனால் பதினைந்து நாட்களுக்குப் பிறகு சூலூர் ராஜேந்திரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


ரயில் பயணத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையில் தன்னைப்பற்றிய முதலமைச்சர் பழனிசாமியும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும்  அவதூறு பரப்பியதாக கூறி சூலூர்  ராஜேந்திரன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை உயர்நீதிமன்றம்  ரத்து செய்துவிட்ட நிலையில் அவதூறாக பேசியதற்காக தனக்கு ஒரு கோடி ரூபாய்  இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இதில்  முதலமைச்சர் பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மட்டும் இன்று  நீதிபதி பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது ஜூன் 10 -ம்  நாளுக்குள் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course