சொத்து பட்டியலில் புதிய தகவல் எடப்பாடி பழனிசாமி பெயரில் சொந்த வீடு, நிலம் இல்லை…!!!!

 

அவர் தனது வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இதில் அவருக்கு ரூ.47 லட்சத்து 64 ஆயிரத்து 542 மதிப்பில் அசையும் சொத்துக்கள் உள்ளன.அவரது பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், குடும்ப சொத்தாக 22 ஏக்கர் நிலம், 6 ஆயிரத்து 700 சதுர அடி வீட்டு மனை உள்ளது என்றும் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

 

ரூ.15 லட்சம் கடன் இருப்பதாகவும், ரொக்க கையிருப்பு ரூ.6 லட்சம் மற்றும் 100 கிராம் தங்க நகைகள் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். வங்கிகளில் சேமிப்பு மற்றும் வைப்புத்தொகையாக ரூ.37 லட்சத்து 44 ஆயிரத்து 542 இருப்பு உள்ளது.

அவரது மனைவியின் ஆண்டு வருமானம் கடந்த நிதி ஆண்டில் குறைந்துள்ளது. அதாவது, கடந்த 2018-19-ம் நிதியாண்டில் ரூ.22 லட்சத்து 75 ஆயிரத்து 288-ஆக இருந்த ஆண்டு வருவாய், 2019-20-ம் நிதியாண்டில் ரூ.9 லட்சத்து 71 ஆயிரத்து 935 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com