எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு – ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து!

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தை அவரது சென்னை இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மை பலம் பெற்று ஆட்சியை பிடித்தது. திமுக கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். தேர்தலில் 66 இடங்களை வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தகுதியைப் பெறுகிறது. இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்காக அதிமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது .

தமிழகத்தின் 16ஆவது சட்டப்பேரவை நாளை கூடவிருக்கும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கூடியது. நிர்வாகிகள் வைத்திலிங்கம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூன்று பேர் பங்கேற்காத நிலையில், 63 எம்எல்ஏக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்தக் கூட்டத்தில், இறுதியாக முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வ அறிவிப்பு அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதிமுக சட்டப்பேரவை குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட கடிதத்தை முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சட்டப்பேரவை செயலரிடம் வழங்கினர்.

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Digital Marketing Course