சட்டமன்ற தேர்தல் எங்கள் மானத்தை காப்பாற்றுகின்ற தேர்தல் -ஸ்டாலின்

 

சட்ட மன்ற தேர்தல் ஆட்சி மாற்றதிற்கானது மட்டுமல்ல, மானத்தை மரியாதையை காப்பாற்றுகின்று தேர்தல் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் மாவட்டங்களில் திமுக தலைவர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் காலத்தில் மட்டுமே மக்களை நாடி வரும் இயக்கம் திமுக அல்ல என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

எந்த சூழலிலும் மக்களின் சுய துக்கங்களில் பங்கேற்கும் இயக்கம் என்றும் உரிமையோடு மக்களை நாடி வந்துள்ளதகவும் கூறினார்.

மீனவ சமுதாயத்தினரை கடல்சார் பழங்குடின மக்கள் என்று பழங்குடின பட்டியலில் சேர்ப்பதற்கு தி.மு.க ஆட்சி நிச்சியம் முயற்சி செய்யும் என்று அவர் கூறினார்.

கன்னியாகுமரி வேட்பாளர் அகஸ்ட்டின், நாகர்கோவில் தொகுதி வேட்பாளர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி இடைத் தேர்தல் வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோருக்கு வாக்கு சேகரித்தார் திமுக தலைவர் ஸ்டாலின்.

ராஜபாளையம் வேட்பாளர் தங்கபாண்டியன், ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர் மாதவ ராவ், சாத்தூர் வேட்பாளர் ரகுராமன், அருப்புக்கோட்டை வேட்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், சிவகாசி வேட்பாளர் அசோகன், விருதுநகர் வேட்பாளர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், திருச்சுழி வேட்பாளர் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு பிரச்சாரம் செய்தார்.

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

Home Business Ideas for Women