சேலம் மாவட்ட தொகுதியில் போட்டியிடும் அதிமுகவினர்.

சட்டமன்ற தேர்தலுக்கு சேலம் மாவட்ட தொகுதியில் சார்பில் போட்டியிடும் அதிமுகவினர்.

 

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி சார்பில் முதல்வரும் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுகிறார்.

சேலம் மேற்கு தொகுதி சார்பில் இ.பாலசுப்ரமணியன் அவர்கள் போட்டியிடுகிறார் .இவர் அதிமுகவின் சேலம் மாநகர மாவட்ட ஜெ.பேரவை இணை செயலாளர்.

சேலம் வடக்கு தொகுதியின் சார்பில் அதிமுகவின் சேலம் மாநகர மாவட்ட செயலாளர் ஜி. வெங்கடாஜலம் அவர்கள் போட்டியிடுகிறார்.

சேலம் மாவட்ட ஓமலூர் தொகுதியில் ஆர். மணி என்பவர் போட்டியிடுகிறார்.இவர் ஓமலூர் ஒன்றிய மாணவரணி செயலாளர் ஆவார்.

சங்ககிரி தொகுதியில் கட்சியின் சார்பில் சங்ககிரி மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ். சுந்தர்ராஜன் அவர்கள் போட்டியிடுகிறார்.

ஏற்காடு தொகுதியில் அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினரான ஜி. சித்ரா அவர்கள் போட்டியிடுகிறார்.

ஆத்தூர் சார்பில் ஏ.பி. ஜெயசங்கரன் போட்டியிடுகிறார்.இவர் ஆத்தூர் நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர்.

கெங்கவல்லி தொகுதி சார்பில் ஆர்.நல்லதம்பி அவர்கள் போட்டியிடுகிறார்.இவர் அதிமுகவின் ஒன்றிய ஜெ. பேரவை துணைத் தலைவர்.

வீரபாண்டி தொகுதியில் சேலம் மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.ராஜா என்ற ராஜமுத்து போட்டியிடுகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top