இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை – தமிழக முதல்வர்

 

கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு, தொற்றின் தாக்கம் குறைய தொடங்கி அதன் மூலம் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்நிலையில், தேர்தல் காலத்தில் பொதுமக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி இன்றி இருந்த காரணத்தால் கொரோனா தொற்று வேகமாக பரவியது.

               

 

தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் கட்ட அலை முன்பு இருந்ததை விட அதிவேகமாக மக்களிடையே பரவி வருகிறது. மேலும், இந்த தொற்றின் தாக்கம் கட்டுக்குள் வருவதற்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளனராம். இதையடுத்து, சமீபத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தியுள்ளனர்.

            

 

மேலும், கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்த இன்று தலைமை செயலகத்தில் முதல்வருடன் மூத்த அமைச்சர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் இந்த ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை முடிந்த பின் நோய் தொற்றின் கட்டுப்பாடுகள் அதிகரிக்குமா என்பது தெரியவரும் 

 

Puthiyathalaimurai TV  Thanthi TV  News18 Tamil Nadu  News7 Tamil  Sathiyam TV  Sun News  Kalaignar News  News J TV  Jaya Plus News  Captain TV News  Polimer News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top