முதலைமச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது இரவு, பகல் பாராமல், ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் இந்தியா, உலக அரங்கில் உயர்வு பெற பிரதமர் மோடி உழைக்கிறார் என தாராபுரம் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பிரதமர் மோடி தலைமையில் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை கேட்கும் போதெல்லாம் செய்துகொடுக்கிறது மத்திய அரசு.
தமிழகத்திற்கு மிகப்பெரிய திட்டங்கள் வரவேண்டுமானால் பிரதமர் மோடி மனது வைக்க வேண்டும். சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பில் தமிழகம் சிறந்துவிளங்க காரணமாக இருந்த பிரதமர் மோடிக்கு தமிழக மக்களின் சார்பில் நன்றி. கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்திற்கு பிரதமர் மோடி நிச்சயம் உதவுவார்.
தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்க அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவது அதிமுக அரசு தான்.
நொய்யல் ஆற்றை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது. தமிழக மக்கள் மீது பேரன்பு கொண்டவர் பிரதமர் மோடி, தமிழகத்தில் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஒதுக்கிய நிதியால் தமிழகத்தில் சுமார் 5,000 கி.மீ. சாலை மேம்படுத்தப்பட்டுள்ளது.
தடையில்லா மின்சாரம், சிறந்த உள்கட்டமைப்பால் குவியும் முதலீடு; ரூ.1125 கோடி மதிப்பில் திருப்பூரில் கூட்டு குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நல்ல கட்சிகள் இணைந்து சிறப்பான கூட்டணியை அமைத்துள்ளோம் என கூறினார்.