முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.பி.அன்பழகன் உள்ளிட்டோர் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம், இந்தியா, மாநிலங்கள், தமிழகம் என கொரானாவின் வேகம் சூடுபிடித்துள்ளது. சில நாட்டின் முக்கிய தலைவர்களும் இந்த தொற்றுக்கு தப்பவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Edappaadi Palanisamay - No Corona

பெரும் பாதிப்பில் இருந்த சென்னையில், தோற்று மிக வேகமாக பரவிவந்த நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வருகிறது. ஆனால், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

பரிசோதனை முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளது.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா தொற்று இல்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top

tamilbusinessideas.com